Powered By Blogger

Monday 3 December 2012

கல்வெட்டுக் காவியம்!!


ள்பாதி ஆடைபாதி
என்றார்கள்!
புரியாமல் விழித்தேன்!
அரையாடை மனிதன்
என்றார்கள்!
பொருள் விளங்காது தவித்தேன்!
என்னிரு விழிகளிலே
உன்பிம்பம் விழும் வரை!!



றுமைக்கோடு என்பதற்கு
உன் குறுக்கெலும்புக் கோடுகளை
விழியேற்ற பின்தான்
அருஞ்சொற்பொருள் விளங்கிற்று!!



ங்கிய சுத்தியலால்
ஓராயிரம் கற்கள் பிளந்தும்
உன் வாழ்நிலை மாறிட - அதன்
வெம்மை தாழ்ந்திட
காலம் கனியவில்லையோ?!!
னியுமென்று காத்திருந்து
கவளமுனக்கு இறங்கவில்லையோ?!
பணிகொடுத்த பண்பாளரும்
உன்னிலை ஏற்றிடுவேன் - என
பொய்யை மட்டுமே உரைத்த
வெள்ளை வேட்டி மைந்தர்களும்
நட்டாற்றில் விட்டனரோ??!!

றம் தவறியும்
அரசியல் பிழைத்தும்
கையூட்டுக் காசில்
கடைவாய் தெரிய
சிரித்தும் பிழைப்போர்கள்
உன் காலடியில் கிடக்கும்
கற்களின் தூசிக்கு
இணையாம் போ!!


ன் வாழ்நாள் மாறும்
ரு நாள்!
உன் சந்ததியினர்
படித்து வருவர்!
உன்னுடல் தந்த  உழைப்பையும்
உன் உயிர் தந்த தியாகத்தையும்
நீ வெட்டிய கற்களிலேயே
கல்வெட்டாய்
பதித்து வைப்பர்!!


அன்பன்
மகேந்திரன்